Kattankudy காத்தான்குடி

Thanks to: Kattankudy User of Facebook

Kattankudy காத்தான்குடி: நேற்று (03/08/2009) காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களின் நினைவுதினம்

நேற்று (03/08/2009) காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களின் நினைவுதினம்

நேற்று (03/08/2009) காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களின் நினைவுதினம்
Yesterday at 9:19am

காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று (03/08/2009) ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டதால் பிரதேசத்தின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

03.08.1990ஆம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, 103 பேர் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர். இவர்களை நினைவுகூர்ந்து வருடாந்தம் ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீரா ஜும் ஆப் பள்ளிவாசலில் இன்று காலை கதமுல் குர் ஆன் ஓதப்பட்டு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஷுஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷுஹதாக்கள் நிறுவனத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. காத்தான்குடிப் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு பிரதான வீதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு சந்தைகள் இன்று கூடவில்லை. மாணவர் வரவின்மையால் பாடசாலைகளும் இயங்கவில்லை. அரசாங்க காரியாலயங்கள் திறந்திருந்த போதிலும் பொது மக்களின் வருகை வழமை நாட்களை விட குறைவாகவே காணப்படுகின்றது.

Reference: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=16435


இன்று காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களின் நினைவுதினம்(பட இணைப்பு)

வீரகேசரி இணையம் 8/3/2009 3:08:19 PM – 1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுவதால் பிரதேசத்தின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

03.08.1990ஆம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, 103 பேர் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்.

இவர்களை நினைவுகூர்ந்து வருடாந்தம் ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீரா ஜும் ஆப் பள்ளிவாசலில் இன்று காலை கதமுல் குர் ஆன் ஓதப்பட்டு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

ஷுஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷுஹதாக்கள் நிறுவனத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு பிரதான வீதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு சந்தைகள் இன்று கூடவில்லை.

மாணவர் வரவின்மையால் பாடசாலைகளும் இயங்கவில்லை. அரசாங்க காரியாலயங்கள் திறந்திருந்த போதிலும் பொது மக்களின் வருகை வழமை நாட்களை விட குறைவாகவே காணப்படுகின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: